உள்ளூர் செய்திகள்

நூல்கள் நமது ஜனநாயகத்திற்கு கிடைத்த களஞ்சியங்கள்: சிவராஜ் சிங் சவுகான்

புதுடில்லி: நூல்கள் நமது ஜனநாயகத்திற்கு கிடைத்த களஞ்சியங்கள் என ஜனாதிபதி மாளிகை தொடர்பான மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் பேசினார்.ராஷ்டிரபதி மாளிகையான ஜனாதிபதி மாளிகையின், மற்றும் இந்தியாவின் முதல் ஜனாதிபதி துவங்கி தற்போதைய ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடர்பாக நேற்று(18.07.2024) மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.விவரம்:1) நமது நம்பிக்கைக்குரிய சிறகுகள்: தொகுப்பு - 1 ; 2) ராஷ்டிரபதி பவன்: ஹெரிடேஜ் மீட்ஸ் தி பிரசன்ட் ; 3) கஹானி ராஷ்டிரபதி பவன் கி என்ற பெயரில் நூல்கள் வெளியிடப்பட்டன.இதில் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன், மத்திய அரசு செயலாளர் சஞ்சய் ஜாஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.முதல் நூலான நமது நம்பிக்கைகளுக்கான சிறகுகள் - தொகுப்பு 1, ராஷ்டிரபதி பவனின் பாரம்பரியம் நிகழ்காலத்தை சந்திக்கிறது, திரௌபதி முர்மு தமது முதலாம் ஆண்டு காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆற்றிய உரைகள் இடம்பெற்றுள்ளன. இவை தேசத்தின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள், மக்களுக்கு நம்பிக்கையை வழங்குகின்றன.இரண்டாவது நூலான ஹெரிடேஜ் மீட்ஸ் தி பிரசன்ட் ராஷ்டிரபதி மாளிகையின் வரலாறு, மரபு, கட்டிடக்கலை சிறப்பைக் கூறுகிறது.முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத் முதல் தற்போதைய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வரையிலான ஒவ்வொரு குடியரசுத் தலைவரின் பயணத்தையும் இது விவரிக்கிறது.மூன்றாவது நூலான கஹானி ராஷ்டிரபதி பவன் கி என்ற நூல் ஜனாதிபதி மாளிகையின் நூறு ஆண்டுகால வரலாற்றை எளிய வார்த்தைகளில் முன்வைக்கிறது. மாளிகையின் பல கோணங்களிலான படங்களுடன் கவர்ச்சிகரமான நடையில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.நூல்களை வெளியிட்டு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசியது, நமது ஜனநாயகத்திற்கும், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கிடைத்த களஞ்சியமாகும் என்றார்.மத்திய இணை அமைச்சர் எல். முருகன், இந்த நூல்கள் வரும் தலைமுறையினருக்கு சிறந்த தகவல் தொகுப்பாக அமையும் என்றார். பின்னர் மூன்று நூல்களின் பிரதிகள் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்