உள்ளூர் செய்திகள்

நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை சார்பில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியருக்கு விருது

நாமக்கல்: நுாலக வாசகர் வட்டம், நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை சார்பில், ஆசிரியர் தின விழா, வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா, டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா மற்றும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா, நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நுாலகத்தில் நடந்தது. மாவட்ட நுாலகர் தேன்மொழி தலைமை வகித்தார். நுாலகர் செல்வம் வரவேற்றார். ரெட்கிராஸ் மாவட்ட செயலாளர் ராஜேஷ்கண்ணன், மாவட்ட கல்வி துணை ஆய்வாளர் பெரியசாமி, பேராசிரியர் கந்தசாமி, ஆசிரியர்கள் சுமதி, தமிழ்ச்செல்வன், தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கவிஞர் நினைவு இல்ல நுாலக வாசகர் வட்ட தலைவர் மோகன் அறிமுக உரையாற்றினார். முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர் முத்துசாமி, அனைவருக்கும் விருது வழங்கி பாராட்டினார். நாமக்கல் மாவட்ட அளவில், ஆசிரியர் பணியை அறப்பணியாக ஏற்றுக்கொண்டு சிறப்பாக பணியாற்றிக்கொண்டிருக்கும், கொல்லிமலை அரியூர் கிழக்கு வளவு பள்ளி ஆசிரியர் கார்த்திகேயனுக்கு, வ.உ.சிதம்பரனார் அர்ப்பணிப்பாசிரியர் விருது வழங்கப்பட்டது.நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ஜெகதீசன், சின்னமுதலைப்பட்டி பஞ்., தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சுஜாதா, மோகனுார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன், வையப்பமலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சாந்தாமணி, தொப்பப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜோதி கண்மணி ஆகியோருக்கு, இந்திய பெண்ணியத்தின் தாயார், சாவித்திரிபாய் புலே அர்ப்பணிப்பாசிரியர் விருது பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பட்டிமன்ற புகழ் சேலம் கலையமுதன், வாழ்க்கையை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் பேசினார். பேரவை ஒருங்கிணைப்பாளர் தில்லை சிவக்குமார், பொருளாளர் ராசா உள்பட பலர் பங்கேற்றனர்.நடப்பு கல்வியாண்டில், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற, எருமப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் செந்தில்குமார் கவுரவிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்