உள்ளூர் செய்திகள்

மிஷனரி பள்ளி ஆசிரியர்கள் சம்பளத்தில் வரி விலக்கு கோரிய மனு தள்ளுபடி

புதுடில்லி: அரசு உதவி பெறும் கிறிஸ்துவ மிஷனரி பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றும் கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களின் சம்பளத்தில் இருந்து டி.டி.எஸ்., வரிப்பிடித்தம் செய்வதில் தவறொன்றும் இல்லை என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சமூகத்துக்கு பல்வேறு தொண்டுகள் செய்து வரும் மிஷனரிகள் வழங்கும் சேவைகளுக்காக, அவர்கள் பெறும் கட்டணத்தில் வரி பிடித்தம் செய்யக்கூடாது' என, மத்திய நேரடி வரி வாரியம் 1944ல் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.மேல்முறையீடுஇதை தொடர்ந்து, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றும் கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களின் சம்பளத்தில் இருந்து வரி பிடித்தம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், இந்த நடைமுறைக்கு 2014ல் வருமான வரித்துறை முற்றுப்புள்ளி வைத்தது.அதன்படி, அனைத்து மதம் சார்ந்த அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து டி.டி.எஸ்., வரி பிடித்தம் செய்யும்படி மாநில கல்வித் துறைக்கு உத்தரவிட்டது.இதை தொடர்ந்து, ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து முன்கூட்டியே டி.டி.எஸ்., வரி பிடித்தம் செய்து கொள்ளும் நடைமுறை அமலுக்கு வந்தது.இதை எதிர்த்து, தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ மறைமாவட்டங்கள் மற்றும் திருச்சபைகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு செய்தன.இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு விசாரித்தது.மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் தத்தார், எஸ்.முரளீதர் வாதிட்டதாவது:ஆசிரியர்களாக பணியாற்றும் கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரியார்களுக்கு அரசு வழங்கும் சம்பளம், பள்ளியை நடத்தும் திருச்சபைக்கு சொந்தமானது. அந்த பணம் ஆசிரியர்களை சென்று சேராது.கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் விபத்தில் மரணம் அடைந்தால், அவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு அவர்களின் உறவினர்களுக்கு சென்று சேராது. திருச்சபைக்கே சேரும்.அவர்கள் குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகி துறவு வாழ்க்கைக்குள் நுழைவதாக உறுதி ஏற்றவுடனேயே, குடும்ப பந்தங்கள் அறுபட்டு விடுகின்றன. எனவே, அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் வரி பிடித்தம் செய்யக்கூடாது.இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.தள்ளுபடிஇதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:ஆசிரியர்களாக பணியாற்றும் கன்னியாஸ்திரிகளும், பாதிரியார்களும் வறுமையில் வாழ்வதாக உறுதிமொழி ஏற்றிருந்தாலும், அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் அரசு மானியத்தில் இருந்து வழங்கப்படுகிறது.வருமானம் என்று ஒன்று இருந்தால் வரி என்பது இருக்க வேண்டும். எனவே, வரி பிடித்தத்தில் இருந்து இவர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்