உள்ளூர் செய்திகள்

போக்சோ வழக்கில் கைது; பள்ளி முதல்வர், தாளாளருக்கு வந்தது நெஞ்சு வலி

துாத்துக்குடி: மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக விசாரித்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் பள்ளி முதல்வர் மற்றும் தாளாளரை கைது செய்தனர். நெஞ்சு வலிப்பதாக கூறியதால், இருவரையும் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சல்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருப்பவர் பொன் சிங். இவர், பள்ளியில் படிக்கும் மாணவியருக்கு மது வாங்கிக் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர். தலைமறைவாக இருந்த பொன் சிங், கோவையில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பற்றி தெரிந்திருந்தும், பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, கிராம மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், பள்ளி தாளாளர் செய்யது அகமது , முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லி ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட நிலையில் இருவருமே ஒரே நேரத்தில் நெஞ்சு வலிப்பதாக கூறி துடிதுடித்தனர். வேறு வழியில்லாத போலீசார், இருவரையும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.சிகிச்சைக்கு பின்னர் இவர்களை கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைக்க போலீஸ் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்