சென்னை ஐஐடி மற்றும் ஓபி ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டி புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை: இந்தியாவின் முதல் அரசமைப்பு அருங்காட்சியகத்திற்கு நவீன ரோபோ சுற்றுலா வழிகாட்டியை வடிவமைக்க சென்னை ஐஐடி மற்றும் ஓபி ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.ஹரியானா மாநிலத்தின் சோனிபட் நகரில் அமைந்துள்ள ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்தியாவின் முதல் அரசமைப்பு அருங்காட்சியக அகாடமியில் மனித உருவம் கொண்ட ரோபோ வடிவமைக்கப்பட உள்ளது. இந்த அரசமைப்பு அருங்காட்சியகம், இந்திய அரசமைப்பு சட்டம் இயற்றப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதத்தில் வரும் நவம்பர் 26-ம் தேதியன்று இந்த அருங்காட்சியகம் தொடங்கி வைக்கப்பட்டு தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. அருங்காட்சியகத்தின் காட்சிப்பொருட்கள் பற்றிய விரிவான தகவல் மற்றும் வழிகாட்டல்களை வழங்ககுவதற்கு நவீன மொழி மாடல்களை இந்த ரோபோ செயல்திட்டம் பயன்படுத்தும். நவீன தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் இன்டராக்டிவ் செயல்பாடுகள், 3-டி அமைப்புகள் மற்றும் முற்போக்கான டிஸ்பிளேக்கள் ஆகியவை இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.