உள்ளூர் செய்திகள்

தாகூர் அரசு கல்லுாரியில் அருங்காட்சியகம் அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்

புதுச்சேரி: தாகூர் அரசு கல்லுாரியில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.தாகூர் அரசு கல்லுாரியில் தொல்லியல் ஆவணங்களைப் பாதுகாக்கும் அருங்காட்சியகம் உருவாக்கப் பெற்றுள்ளது. கல்லுாரியின் அரவிந்தர் நுாலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு தலைமை தாங்கிய கல்லுாரி முதல்வர் சசி காந்ததாஸ் பேசுகையில், தாகூர் அரசு கல்லுாரி பல்வேறு பெருமைகளைப் பெற்று வருகிறது. பசுமை வன சுற்றுலாத் தலமாகமாறியுள்ளது. நாக் கமிட்டியினால் ஏ கிரேடு அங்கீகாரம் பெற்ற கல்லுாரியாக உள்ளது என்றார்.அமைச்சர் நமச்சிவாயம், அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பேசியதாவது:மாநிலத்தில் ஒரு கல்லுாரியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது பெருமைக்குரியது. பல்வேறு நாடுகளுடன் புதுச்சேரி வாணிபத் தொடர்பு கொண்டிருந்ததை இங்குள்ள ஆவணங்கள் நிருபிக்கின்றன என்றார்.இந்தியத் தொல்லியல் துறை சென்னை வட்டத்தின்கண்காணிப்பாளர் முத்தையா காளிமுத்து, புதுச்சேரி கலைப்பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள் வாழ்த்தி பேசினர்.நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், வரலாற்றுத் துறை அறிஞர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்று துறை முன்னாள் மாணவர்கள், தற்போதைய மாணவர்கள் பங்கேற்றனர். வரலாற்றுத் துறைப் பேராசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.பொதுமக்கள் பார்க்கலாம்தாகூர் கலை அறிவியல் கல்லுாரி அருங்காட்சியகத்தில், கி.மு., 5ம் நுாற்றாண்டு முதல் புதுச்சேரியில் கிடைத்த அரிய பொக்கிஷயங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வரலாற்று காலம், வரலாற்றுக்கு முந்தைய காலம், கற்காலம் என புதுச்சேரியில் கிடைத்த தொல்லியல் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அலுவலக நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்