உள்ளூர் செய்திகள்

பள்ளி நுழைவாயிலில் ஜாதி பெயர்; அரசின் நிலை என்ன? ஐகோர்ட் கேள்வி

சென்னை: பள்ளிகளின் நுழைவாயிலில் ஜாதி பெயர் இருப்பது தொடர்பாக, தமிழக அரசின் நிலை என்ன? என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட் நீதிபதி பரத சக்கரவர்த்தி சரமாரி கேள்விகளை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது:* ஜாதிகள் இல்லையடி பாப்பா என சொல்லிக் கொடுத்துவிட்டு, பள்ளி நுழைவாயிலில் ஜாதி பெயரை எழுதலாமா?* ஜாதி இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது.* ஜாதியை நிலை நிறுத்தும் நோக்கில் ஜாதி பெயரில் சங்கம் தொடங்க முடியுமா? இது தொடர்பாக சங்கம் தொடங்குவது சரியா?* சங்க பதிவு சட்டங்களின்படி ஜாதியின் பெயரில் சங்கங்கள் துவங்க முடியுமா?* இதுபோன்ற ஜாதி சங்கங்கள் சார்பில் பள்ளி கல்லூரிகள் என கல்வி நிலையங்களும் இயங்குகின்றன.* பள்ளிகளின் நுழைவாயிலில் ஜாதி பெயர் இருப்பது தொடர்பாக தமிழக அரசின் நிலை என்ன?* இது குறித்து தமிழக அரசின் நிலை குறித்து பிப்ரவரி 19ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்