உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் எதிர்காலத்தில் அலட்சிய போக்கு: தி.மு.க., அரசு மீது இ.பி.எஸ்., தாக்கு

சென்னை: மாணவர்கள் எதிர்காலத்தில் அலட்சியப் போக்குடன் தி.மு.க., அரசு செயல்படுகிறது என்று அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:கூட்டுறவுத் துறை சார்பில், கடந்த அக்., மாதம் எஸ்.ஆர்.பி., மற்றும் டி.ஆர்.பி., பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், 100 நாட்கள் கடந்த பின்னும், இது வரை முடிவுகளை வெளியிடாமல் மாணவர்களை வஞ்சித்து வருகிறது தி.மு.க., அரசு.பெரும் கனவுகளோடு தாங்கள் எழுதிய தேர்வுகளின் முடிவுகளை இது வரை வெளியிடாத விடியா தி.மு.க., அரசைக் கண்டித்து, கூட்டுறவுத் துறை வளாகத்தின் முன்பு அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், திமுக அரசின் காவல்துறை அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வை முறையாக நடத்த தான் நிர்வாகத் திறனில்லை என்று பார்த்தால், நடந்து முடிந்த கூட்டுறவுத் துறைத் தேர்வுக்கான முடிவுகளை வெளியிடக் கூட வக்கற்ற அரசாக பொம்மை முதல்வரின் விடியா தி.மு.க., அரசு இருப்பது வெட்கக்கேடானது. தேர்வர்களின் எதிர்காலத்தில் அலட்சியப் போக்குடன் இருக்கும் ஸ்டாலின் மாடல் தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனம்.கைது செய்யப்பட்ட தேர்வர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், கூட்டுறவுத் துறை தேர்வின் முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு இ.பி.எஸ்., அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்