உள்ளூர் செய்திகள்

விவேகானந்தர் கோச்சிங் சென்டரில் தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்

புதுச்சேரி: முதலியார்பேட்டை, விவேகானந்தர் கோச்சிங் சென்டரில் தினமலர் பட்டம் மாணவர் இதழை நிறுவனர் வி.சி.சி., நாகராஜன் மாணவர்களுக்கு வழங்கினார்.மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதைய தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'தினமலர் பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.முதலியார்பேட்டை, விவேகானந்தர் கோச்சிங் சென்டரில் தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, சென்டரின் நிறுவனர் வி.சி.சி., நாகராஜன் தலைமை தாங்கி, இந்த கல்வியாண்டு முழுதும் மாணவர்களுக்கு பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்