உள்ளூர் செய்திகள்

காமராஜர் பல்கலையில் அடுத்த ஆண்டு முதல் இரட்டை பட்ட முறை!

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் யில் அடுத்த ஆண்டு முதல் இரட்டை பட்டப் படிப்பு முறை அமல்படுத்தப்படும் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் கற்பககுமாரவேல் தெரிவித்தார். வரும் 2009-10 கல்வி ஆண்டு முதல் இரட்டை பட்ட முறையை அமலுக்கு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஏதாவது கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தொலைநிலைக் கல்வி மூலம் மற்றொரு பட்டத்தையும் படிக்கலாம். இதன் மூலம், ஒரே காலத்திற்குள் இரட்டை பட்டம் பெற முடியும் என்று  கற்பககுமாரவேல் மேலும் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்