சாரணர் பயிற்சி முகாம்: சிறந்த சாரணருக்கு ஆளுநர் விருது
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், திருவாரூர், பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் சாரண, சாரணியர் ஆளுனர் விருது தேர்வு பயிற்சி முகாம் நடந்தது. இதில் திருவாரூர், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளில் இருந்து, 400 சாரண, சாரணிய மாணவர்கள் பங்கேற்றனர். முதல்நாள் எழுத்துத்தேர்வு நடந்தது. இரண்டாம் நாள் கயிறு ஏறும் பயிற்சி, கைவினை பொருள் தயாரிப்பு பயிற்சி, முதலுதவி பயிற்சி குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற சாரண, சாரணியர்களில், சிறந்த மாணவ, மாணவியருக்கு மாநிலத்திலேயே உயர்ந்த ஆளுனர் விருது வழங்கப்படுகிறது.