உள்ளூர் செய்திகள்

தாக்குதலில் இறந்த காவலர் குழந்தைகள் படிக்க மும்பை பல்கலை. உதவி!

மும்பை தாக்குதலில் இறந்து போன போலீசாரின் குழந்தைகள் பல்கலைக்கழகத்தில் எந்தத் துறையிலோ அல்லது பல்கலைக்கழகத்தின் இணைக்கப்பட்ட கல்லூரிகளிலோ படிக்க விரும்பும் இடத்தில் இடம் அளிக்கப்படும். அவர்களது படிப்புக்கான செலவுகளை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே ஏற்றுக் கொள்ளும். அகாதெமிக் கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று மும்பை பல்கலைக்கழகத் துணைவேந்தர் விஜய் கோல் தெரிவித்தார். எந்தக் கல்லூரியாவது முழுச் செலவை ஏற்ற முடியாத நிலை இருந்தால் செலவில் 50 சதவீத சலுகையை அளித்தால் போதும். மீதமுள்ள தொகையைப் பல்கலைக்கழகம் வழங்கும். பல்கலைக்கழக நிர்வாகக் கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து அனுமதி பெறப்பட்டதும் இதுகுறித்து கல்லூரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இறந்து போன காவலர்களின் குழந்தைகளின் உயர்கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மும்பை  பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்