உள்ளூர் செய்திகள்

ஐ.ஐ.டி.-ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு பயிற்சி: மாணவ, மாணவியர் ஆர்வம்!

தினமலர் கல்விமலர் இணைய தளம் மற்றும் பிட்ஜி இணைந்து இந்தத் தேர்வை நடத்தின. ஐ.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் படிக்க மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. கடுமையான உழைப்பு மற்றும் திறமை இருந்தும் முறையான வழிகாட்டுதல் இல்லாததால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களால் ஐ.ஐ.டி., கல்வி நிலையத்தில் சேர முடிவதில்லை. இங்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் படிக்க வசதியாக தினமலர் கல்வி மலர் இணைய தளம் மற்றும் பிட்ஜி நிறுவனம் இணைந்து இலவச நுழைவுத் தேர்வு பயிற்சியை வழங்க உள்ளன. சென்னை மற்றும் அதையொட்டியுள்ள, மாவட்டங்களில் உள்ள ஏழை மாணவர்களுக்கு இந்த இலவச நுழைவுத்த ரவுப் பயிற்சி வரப்பிரசாதமாக உள்ளது. பெற்றோரின் மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய்க்குள் உள்ள மாணவர்கள் மட்டுமே இப்பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர். பயிற்சி வகுப்புகள் அடுத்த கல்வியாண்டு முதல் சென்னை பிட்ஜி நிறுவனத்தில் வழங்கப்படும். எட்டு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பயிற்சியில் சேர முடியும். இந்த இலவசப் பயிற்சியில் சேர்வதற்கான போட்டித் தேர்வு சென்னை கீழ்ப்பாக்கம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்றது. இதில் 200க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில் அதிக மதிப்பெண் பெறும் 120 மாணவர்கள் பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிட்ஜி நிறுவனத்தில் பணிபுரியும் பல ஆசிரியர்கள் ஐ.ஐ.டி.,யில் படித்தவர்கள் என்பதால் அவர்கள் அளிக்கும் இப்பயிற்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுக்கான இலவசப் பயிற்சிப் போட்டித் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளுடன் அவர்களது பெற்றோரும் அதிக அளவில் வந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்