உள்ளூர் செய்திகள்

ராகிங் கொடுமை - அரசு பள்ளி மாணவன் தற்கொலை

நாமக்கல்: ராகிங் கொடுமை காரணமாக அரசு பள்ளி மாணவன் ஒருவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டான். சேலம் மாவட்டம் கருமாபாளையத்தை சேந்தவன் கார்த்திகேயன். இவன் ராசிபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் பள்ளி வளாகத்தி்ல் அமைந்துள்ளவிடுதியில் தங்கியிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று சக மாணவர்கள் அவனை ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையடைந்த மாணவன் கார்த்தி்கேயன் விடுதியில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தான். இதனையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். இந்நிலையி்ல் சிகிச்சை பலனின்றி மாணவன் பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்