ராணுவத்தில் மாணவர்கள் ஆர்வமுடன் இணைய வேண்டும்: என்.சி.சி. தலைவர் அழைப்பு
நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள என்.சி.சி. முகாமை அகில இந்திய என்.சி.சி. இயக்குனர் லெப்டினென்ட் ஜெனரல் சக்கரவர்த்தி நேற்று பார்வையிட்டார். அதிகாரிகள் மத்தியில் அவர் பேசுகையில், "என்சி.சி. மாணவர்கள் எந்த சவாலையும் சமாளிக்கும் ஆற்றலை பெற்றிருக்க வேண்டும். என்.சி.சி. முகாமில் பயிற்சி பெறும் மாணவ, மாணவியரை முகாம் அதிகாரிகள் தங்களது குழந்தைகளாக பாவிக்க வேண்டும். ராணுவத்தில் மாணவர்கள் ஆர்வமுடன் இணைய வேண்டும். துணை ராணுவம், கப்பற்படை மற்றும் விமானப் படையில் அதிகளவில் என்.சி.சி. மாணவர்கள் இணையவேண்டும். இதற்கு அதிகாரிகள் ஊக்குவிப்பு வழங்க வேண்டும்" என்றார். நிகழ்ச்சியில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர் மாநிலங்களின் பொறுப்பு அதிகாரி, என்.சி.சி. கமோடார் அய்யப்பா, கோவை குரூப் கமாண்டர் லெப்டினெனட் கர்னல் அலுவாலியா, ஊட்டி முகாம் அலுவலர் லெப்டினென்ட் கர்னல் வெங்கட்ராமன் ஆகியோர் பங்கேற்றனர்.