உள்ளூர் செய்திகள்

பள்ளி சத்துணவில் பாம்பு - பீகாரில்தான் இந்த அவலம்!

பாட்னா: பீகார் மாநிலம், சீதாமஹரி மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மயக்கமடைந்த 57 பேரையும் அருகில் உள்ள மருத்துவமனையில்அனுமதித்தனர். பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவை பரிசோதித்தபோது, அதில் ஒரு பெரிய பாம்பு இருந்தது. அந்த உணவு பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்