உள்ளூர் செய்திகள்

கோவை கல்வி மாவட்ட அனைத்து குறுமைய பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

கோவை: கோவை கல்வி மாவட்ட அனைத்து குறுமைய பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள், பி.எஸ்.ஜி., சர்வஜன மேல்நிலை பள்ளி சார்பில் நடந்தது. இதில் 17 வயதுக்குட்பட்ட சீனியர் பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி வாகை சூடிய பள்ளிகள்: கால்பந்து - கார்மல் கார்டன் பள்ளி, சாமி சிவானந்தா பள்ளி, கோபால்நாயுடு பள்ளி; ஹாக்கி - வித்யவிகாஷினி மெட்ரிக் பள்ளி, எஸ்.பி.கே.வி., பள்ளி, வித்யவிகாஷ் மெட்ரிக் பள்ளி. கூடைப்பந்து -பாரதி மெட்ரிக் பள்ளி, பி.எஸ்.ஜி., சர்வஜனபள்ளி, மல்லையன் மெட்ரிக் பள்ளி; வாலிபால் -இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி, தடாகம் அரசு மேல்நிலை பள்ளி, மத்வராயபுரம் அரசு பள்ளி. கோ -கோ - சி.ஆர்.ஆர்.,மெட்ரிக் பள்ளி, ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலை பள்ளி, ஆர்.ஜி., புதுார் எஸ்.வி.எம்.,பள்ளி; கபடி - வி.எஸ். செங்கோட்டையா பள்ளி, சாமி சிவானந்தா பள்ளி. த்ரோபால்- ஜி.ஆர்.டி.,மெட்ரிக் பள்ளி, மாரன்னகவுடர் பள்ளி, தம்பு மெட்ரிக் பள்ளி; ஹேண்ட்பால்- ஜி.கே.டி.,பள்ளி, ஜி.ஆர்.டி.,சிபிஎப். பள்ளி; ஜி.ஆர்.டி.,மெட்ரிக் பள்ளி பூப்பந்து - சி.ஆர்.ஆர்.,பள்ளி, அசோகாபுரம் அரசு பள்ளி, எஸ்.சி.எம்., பள்ளி; டென்னிஸ் ஒற்றையர் - ஜி.ஆர்.ஜி.,மெட்ரிக் பள்ளி, பி.வி.பி.,மெட்ரிக் பள்ளி ஆர்.எஸ்.புரம் டென்னிஸ் இரட்டையர் - பி.வி.பி.,பள்ளி, விவேகம் மெட்ரிக் பள்ளி, வெங்கடலட்சுமி மெட்ரிக் பள்ளி; இறகுப்பந்து ஒற்றையர் - வித்யநிகேதன் மெட்ரிக் பள்ளி, பி.வி.பி.,பள்ளி டேபிள்டென்னிஸ் ஒற்றையர் - வித்யவிகாஷ் மெட்ரிக் பள்ளி, செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி ஒண்டிபுதுார், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி; டேபிள்டென்னிஸ் இரட்டையர்- பாரதி மெட்ரிக் பள்ளி, ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி. முதலிடம் பெற்ற பள்ளிகள் மட்டும் நவ.,13, 14ம் தேதிகளில் ஊட்டியில் நடக்கவுள்ள மண்டல போட்டியில் பங்கேற்க தகுதி பெறுகின்றன. இத்தகவலை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அனந்தலட்சுமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்