கீழமுஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில நீச்சல் போட்டிக்கு தகுதி
பரமக்குடி: பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், மாநில நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றனர். பரமக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், அருப்புக்கோட்டை, தேவகோட்டை, ராஜபாளையம் ஆகிய 7 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான நீச்சல் போட்டிகள், விருதுநகர் நாடார் கலைக் கல்லூரியில் நடந்தது. இதில் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப் பள்ளி 9 ம் வகுப்பு மாணவிகள் பூமாலா, தனலெட்சுமி, மற்றும் பிளஸ் 1 மாணவி பிரியதர்ஷினி ஆகியோர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். இவர்கள் அடுத்த மாதம் காரைக்குடியில் நடக்கவுள்ள போட்டியில் பங்கேற்கின்றனர். மாணவிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை பள்ளி தாளாளர் முகம்மது உமர், தலைமையாசிரியர் அஜ்மல்கான் பாராட்டினர்.