உள்ளூர் செய்திகள்

பாலியல் தொந்தரவு கொடுப்பதாகக் கூறி பள்ளியில் கிராம மக்கள் முற்றுகை

சாத்தூர்: சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாகக் கூறி, பள்ளியில், கிராம மக்கள் முற்றுகையிட்டனர். விருதுநகர் மாவட்டம் சின்னகாமன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குமாரசாமி, பொருளியல் ஆசிரியர் உதயசூரியன், கணித ஆசிரியர் மணிவண்ணன். இவர்கள், உடன் பணிபுரியும் ஆசிரியைகள், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தருவதாகவும், அவர்களை உடனடியாக வேறு பள்ளிக்கு மாற்றவும் வலியுறுத்தி கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். ஆய்வுக்காக வந்த முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்குமாரையும் முற்றுகையிட்டனர். மாலை 4க்கு துவங்கிய போராட்டம் 6 மணி வரை நீடித்தது. முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்குமார்: இரு மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியை ஒருவர், தனக்கு அதிக பணிச்சுமை அளிப்பதாக புகார் செய்தார். இதுபற்றி விசாரிக்க வந்த என்னை முற்றுகையிட்டவர்கள், பணியில் உள்ள 3 ஆசிரியர்கள் தவறாக நடப்பதாக கூறினர். விசாரித்ததில் அப்படி எதுவும் நடக்கவில்லை என ஆசிரியைகள் கூறுகின்றனர். தங்களுக்கு வேண்டிய ஆசிரியர்களை நியமிப்பதற்காக பொய் புகார் தெரிவிப்பதாகக் கூறினார். ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய மனுஅளித்ததால் பள்ளிக்கல்வி இயக்குனரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்