கல்லூரி அளவிலான கிரிக்கெட் போட்டி: எத்திராஜ் மகளிர் கல்லூரி சாம்பியன்
மீனம்பாக்கம்: கல்லூரி அளவிலான கிரிக்கெட் போட்டியில், எத்திராஜ் மகளிர் கல்லூரி அணி, சாம்பியன் பட்டம் வென்றது. ஏ.எம்., ஜெயின் கல்லூரி சார்பில், மகளிர் கல்லூரி கிரிக்கெட் போட்டி, அதன் வளாகத்தில் நடந்தது. இறுதி போட்டியில், முதலில் விளையாடிய எத்திராஜ் மகளிர் கல்லூரி அணி, 15 ஓவரில், இரண்டு விக்கெட்டை இழந்து, 85 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய, எஸ்.டி.என்.பி., வைஷ்ணவா மகளிர் கல்லூரி அணி, 13.4 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 72 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. எத்திராஜ் அணி, 13 ரன்கள் வித்தியாசத்தில், வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.