உள்ளூர் செய்திகள்

இது, எங்க பேப்பர்! ஆசிரியர்கள், மாணவர்கள் கொண்டாடும் இதழ் ’பட்டம்’

இந்த இதழ் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் என, ஆசிரியர்கள், கல்வியாளர் உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர். நேற்று வெளியான, பட்டம் முதல் இதழை, நீலகிரி மாவட்டம், கூடலுாரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, அசெம்ளியில், தலைமையாசிரியர் ராபர்ட், மாணவர்கள் முன் அறிமுகம் செய்து, வாசித்துக் காட்டினார். இதழில் இடம் பெற்றுள்ள, மாணவர்களுக்கான பொது அறிவுத்திறன் மேம்பாடு கருத்துக்கள், கட்டுரைகள் உள்ளிட்டவற்றை எடுத்துரைத்தார். ராபர்ட் பேசியதாவது: பல அரிய தகவல்கள், பள்ளி மாணவர்களைத் தேடி வரும் வகையில், தினமலர் நாளிதழின், பட்டம் மாணவர் இணைப்பு சிறப்பாக வெளிவந்துள்ளது. இதை வாசிப்பதன் மூலமாக, மாணவர்களின் கல்வி ஆர்வம், பொது அறிவு அதிகரிக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான எண்ணம் வளர இந்த இதழ் உதவும். இந்த இதழை படித்து முடித்தபின் துாக்கிப் போடாமல், பாதுகாத்து வைத்தால் எதிர்காலத்துக்கு உதவும். காரணம், இது, எந்த காலத்திலும் படித்து பயன்பெறக் கூடியது. மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள இந்த இதழ் உதவும். விளையாட்டு, அறிவியல், பொது அறிவு, ஜோக்ஸ் என, சிறார்களை கவர பல விஷயங்கள் உள்ளன. இந்த, பட்டம் இதழை, மாணவர்கள் தவறாமல் திங்கள் தோறும் வாங்கி வாசித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு ராபர்ட் பேசினார். இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்