உள்ளூர் செய்திகள்

கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்வு முடிவு வெளியிட ஐகோர்ட் உத்தரவு

சேலம் மாவட்டத்தை சேர்ந்த, ஹரிகரன் தாக்கல் செய்த மனு: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய, அரசு உத்தரவிட்டது. நடத்தப்படாத தேர்வுகளுக்கு, மாணவர்களிடம் இருந்து கட்டணம் செலுத்தும்படி, அண்ணா பல்கலை கோரியது. ஏழு லட்சம் பேர், பொறியியல் படிப்புகளில் படிக்கின்றனர்.ரத்து செய்யப்பட்ட தேர்வுகளால் கட்டணமாக, 100 கோடி ரூபாய் கிடைக்கும்.தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான தேதியை நீட்டித்து, அண்ணா பல்கலை அறிவிப்பு வெளியிட்டது. மாணவர்கள் சிலர் பயந்து போய், தேர்வு கட்டணம் செலுத்தினர். அவர்களுக்கு மட்டுமே, &'பாஸ்&' அறிவிப்பு வந்தது. கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு, தேர்வு முடிவு அறிவிக்கப்படவில்லை. தேர்வு கட்டணம் கோரிய அண்ணா பல்கலையின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.கட்டணம் செலுத்தும்படி வற்புறுத்தாமல், தேர்வு முடிவை அறிவிக்கும்படி உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோன்று, சவுந்தர்யா என்ற மாணவியும் மனு தாக்கல் செய்தார்.மனுக்கள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. மாணவர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் கே.துரைசாமி வாதாடினார். தேர்வு கட்டணம் செலுத்தினாலும், செலுத்தாவிட்டாலும், மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார். மனுவுக்கு பதில் அளிக்க, அண்ணா பல்கலைக்கு உத்தரவிட்டு, விசாரணையை, செப்., 1க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்