உள்ளூர் செய்திகள்

துணை வேந்தர் சுரப்பா மீது முழு நம்பிக்கை: பேராசிரியர்கள் தகவல்

சென்னை: அரசு தரப்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அண்ணா பல்கலையின் துணை வேந்தர் சுரப்பா மீது, முழு நம்பிக்கை இருப்பதாக, பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். சிக்கன நடவடிக்கைகளை, அவர் மேற்கொண்டார் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.அண்ணா பல்கலை பேராசிரியர்கள் சங்கத் தலைவர் அருள்அறம் மற்றும் செயலர் சந்திரமோகன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:அண்ணா பல்கலை துணை வேந்தர் சுரப்பா மீது, ஊழல் குற்றம்சாட்டி, அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்படும் என, அரசு அறிவித்திருப்பது, பேராசிரியர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.சுரப்பா தலைமையிலான நிர்வாகம், ஊழலற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. எங்களுக்கு எட்டியவரை, ஊழலுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். பொது சேவையில், ஊழலற்ற அதிகாரியாக, எங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்.குறை சொல்ல முடியாத துணை வேந்தர் ஒருவர் மீது, ஊழல் புகார் கூறி, விசாரணையை அறிவித்திருப்பது, பேராசிரியர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை, சர்வதேச அளவில் புகழ் பெற்ற, அண்ணா பல்கலையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும். பேராசிரியர்களை பொறுத்தவரை, சுரப்பா மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம். அவர் மீது கூறப்படும் புகார்கள் அடிப்படை ஆதாரமற்றவை. எனவே, விசாரணை உத்தரவை அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்