உள்ளூர் செய்திகள்

ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி கல்வி கட்டண வழக்கில் தீர்ப்பு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, மருத்துவ கல்லுாரி கல்வி கட்டண வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், 2013ல், அப்பல்கலை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அதில், ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரியில், அரசு மருத்துவ கல்லுாரி இட ஒதுக்கீட்டின் படி, கவுன்சிலிங் மூலம் அட்மிஷன் துவங்கியது. கல்லுாரியை அரசு ஏற்றாலும், தன்னாட்சி மருத்துவ கல்லுாரி என அரசாணை பிறப்பித்து, ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரிக்கு ஆண்டு அட்மிஷன் கட்டணமாக, 4.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. கடந்த, 2014 - 2015ல், 5 லட்சத்து, 80 ஆயிரம் என, கட்டணம் வசூலிக்கப்பட்டது.பல் மருத்துவ படிப்புக்கு, 3.௪௫ லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், &'அரசு மருத்துவ கல்லுாரியில் உள்ள கட்டணத்தையே நிர்ணயிக்க வேண்டும்&' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாணவர்கள் வழக்கு தொடுத்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி, கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, நீதிபதி பாலசுப்ரமணியம் மற்றும் நான்கு துணைவேந்தர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அக்குழு, மருத்துவ பட்டப்படிப்பிற்கு ஆண்டுக்கு, 5.௪௪ லட்சம், பல் மருத்துவ பட்டப்படிப்புக்கு ஆண்டுக்கு, 3.௪௫ லட்சம் என, நிர்ணயம் செய்தது. இத்தொகையை சில மாணவர்கள் செலுத்தினாலும், சில மாணவர்கள், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.இதனால், மருத்துவ மாணவர்கள் கட்ட வேண்டிய, 60 கோடி ரூபாய்க்கும் மேலான தொகையை, வசூலிக்க முடியாமல் கல்லுாரி நிர்வாகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது.இந்நிலையில், சில தினங்களுக்கு முன், இவ்வழக்கு, நீதிபதிகள் உமேஷ் லலித், வீனிட் சரண், ரவீந்தராபகாட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப் பட்டது. அதில், மருத்துவ பட்டப்படிப்பிற்கு, 5.௪௪ லட்சம், பல் மருத்துவ படிப்புக்கு, 3.௪௫ லட்சம் கட்டணமாக வசூலிக்கலாம் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முதுநிலை மருத்துவ படிப்புக்கு, 9.௬௦ லட்சம், முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கு, 8.௫௦ லட்சம் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் மூன்று வார காலத்துக்குள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்