உள்ளூர் செய்திகள்

கல்விச் சான்றுகளை பல்கலையில் ஏன் உறுதி செய்யவில்லை? : உயர்நீதிமன்றம்

மதுரை: &'பணிக்கு தேர்வானோரின் கல்விச் சான்றுகளை சம்பந்தப்பட்ட பல்கலையில் டி.என்.பி.எஸ்.சி.,ஏன் உறுதி செய்யவில்லை. அதற்கு எத்தகைய வழிகாட்டுதல் பின்பற்றப்படுகிறது,&' என, கேள்வி எழுப்பி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பை ஒத்திவைத்தது.திருமங்கலம் வழக்கறிஞர் சக்திராவ் தாக்கல் செய்த மனு:தமிழ் வழியில் படித்தோருக்கு மாநில அரசுப் பணியில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. குரூப்1 தேர்விற்கு டி.என்.பி.எஸ்.சி., ஜனவரி 20 ல் அறிவிப்பு வெளியிட்டது. இதில் தொலைநிலைக் கல்வியில் பட்டம் பெற்று, தமிழ் வழியில் படித்ததற்குரிய (பி.எஸ்.டி.எம்.,) சான்று சமர்ப்பித்தோரின் விண்ணப்பங்களை ஏற்றுள்ளனர். அவர்களுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது. டி.என்.பி.எஸ்.சி.,யின் குரூப் 1 தேர்வு அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு சக்திராவ் மனு செய்தார்.நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. நேற்று முன்தினம் டி.என்.பி.எஸ்.சி.,தரப்பு,&'தமிழ்வழியில் படித்ததற்கான ஒதுக்கீட்டில் 2016 முதல் 2019 வரை 85 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களில் 53 பேர் தொலைநிலைக் கல்வி, 32 பேர் கல்லுாரியில் பயின்றவர்கள்,&'எனக்கூறி ஆவணம் தாக்கல் செய்தது.நீதிபதிகள், &'மதுரை காமராஜ், அண்ணாமலை பல்கலையில் தொலைநிலைக் கல்வியில் பட்டம் பெற்றவர்கள்தான் அதிகம் தேர்வாகியுள்ளனர்,&' என்றனர்.மதுரை காமராஜ் பல்கலை தரப்பு,&'இப்பல்கலையில் போலிச் சான்றுகள் வழங்கிய விவகாரத்தில் தொலைநிலைக் கல்வி கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டாளர் ராஜராஜன் உட்பட சில அலுவலர்கள் 2019 ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடக்கிறது,&' என தெரிவித்தது.நீதிபதிகள்,&'போலிச் சான்று பெற்றவர்களில் யாராவது பணி நியமனம் பெற்றுள்ளனரா என கண்டறிய வேண்டியுள்ளது,&' எனக்கூறி ஒத்திவைத்தனர். நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.தமிழக அரசுத் தரப்பு: பல்கலை ஒப்புதல் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து 800 சான்றிதழ்களை சேகரித்துள்ளனர். விசாரணை துவக்க கட்டத்தில் உள்ளது. கொரோனா ஊரடங்கால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.பல்கலை தரப்பு: தமிழகத்தில் 2280 பேர், வெளிமாநிலங்களைச் சேர்ந்த 2376 பேர் படிக்காமல், கட்டணம் செலுத்தாமல் பட்டம் பெற்றதாக 2014 லிருந்து 3 ஆண்டுகள் பட்டப் படிப்பு முடித்ததற்கான சான்று அளிக்கப்பட்டுள்ளது. நீதிபதி (ஓய்வு) அக்பர் அலி தலைமையிலான உயர்மட்டக்குழு விசாரணை அறிக்கை அடிப்படையில் ராஜராஜன் உட்பட சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.ராஜராஜன் தரப்பு: ராஜராஜன் 2017 ல்தான் பணியில் சேர்ந்தார். அவருக்கும் சான்றிதழ்கள் வழங்கியதற்கும் சம்பந்தமில்லை. புகாரில் உள்நோக்கம் உள்ளது. உயர்மட்டக்குழு விசாரணையில் விளக்கமளிக்க வாய்ப்பளிக்கவில்லை. &'சார்ஜ் மெமோ&' அளிக்கவில்லை. ஆக.,31 ல் ஓய்வு வயதை அடைந்தார். ஆதலால் இவ்வழக்கை விசாரிக்க அவசியமில்லை. &'தன் மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இல்லை,&' என சஸ்பெண்ட் செய்யப்பட்ட பல்கலை கம்ப்யூட்டர் ஊழியர் கார்த்திகை செல்வன் தரப்பு தெரிவித்தது.நீதிபதிகள்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை துவங்கி ஓராண்டிற்கு மேலாகியும் முன்னேற்றம் இல்லை. வழக்கு பதியவில்லை. கல்விச் சான்றுகளை சம்பந்தப்பட்ட பல்கலையில் டி.என்.பி.எஸ்.சி.,உறுதி செய்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை. அதற்கு எத்தகைய வழிகாட்டுதல் பின்பற்றப்படுகிறது என டி.என்.பி.எஸ்.சி.,தரப்பில் விபரம் பெற்று தெரிவிக்க வேண்டும் எனக்கூறி தீர்ப்பை ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்