மினி கிளினிக் பெயரை மாற்றுங்க! தமிழ் வளர்ச்சி இயக்குனர் வலியுறுத்தல்
சென்னை: &'&'தமிழக அரசு, &'மினி கிளினிக்&' என்ற வார்த்தையை, &'சிறு மருத்துவமனை&' என, தமிழில் மாற்ற வேண்டும்,&'&' என, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் விசயராகவன் பேசினார்.சென்னை, வேல்ஸ் பல்கலை தமிழ்த்துறை, அயல்நாட்டு தமிழர் புலம் சார்பில், பாரதி விழா கொண்டாடப்பட்டது. கோபம்இதில், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் விசயராகவன் பேசியதாவது:பாரதியார், நாட்டின் பல மாநிலங்களுக்கு சென்றவர். ஹிந்தி, சமஸ்கிருதம், வங்காளம், ஆங்கிலம், பிரெஞ்ச் உள்ளிட்ட, 14 மொழிகளை கற்றவர். என்றாலும், அவர், &'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதாவ தெங்குங் காணோம்&' என, தமிழை சிலாகித்தார். ஆனால், தமிழில் பேசாத தமிழர்களைப் பார்த்து, &'வேறு வேறு பாஷை கற்பாய்; வீட்டு வார்த்தை கற்கிலாய் போ&' என, கோபமுற்றார்.தாய்மொழி தான், ஒரு இனத்தின் அடையாளம். இன அடையாளம் இருக்கும் வரை தான், தனித்த வரலாறு இருக்கும். மொழி அழிந்தால், வரலாறு அழியும்; பெருமிதம் ஒழியும். நாட்டில், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில், அவர்களின் மொழி தான் முதன்மையாக பேசவும், எழுதவும் படுகிறது. அங்குள்ள பெயர் பலகைகளில், அந்த மொழிகள் தான் உள்ளன. தமிழகத்தில் தான், அந்த நிலை இல்லை.கனவுதற்போது, தமிழக அரசு செயல்படுத்தி வரும் அருமையான திட்டமான, &'அம்மா மினி கிளினிக்&' என்பதை, &'அம்மா சிறு மருத்துவமனை&' என, தமிழாக்கம் செய்ய வேண்டும். அப்போது தான், பாரதியின் கனவு நனவாகும். இவ்வாறு, அவர் பேசினார். நிகழ்ச்சியில், வேல்ஸ் பல்கலை துணை வேந்தர் ஸ்ரீமன் நாராயணன், தமிழ் துறை தலைவர் மகாலிங்கம், பேராசிரியர் பன்னிருகை வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.