பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பிரச்னை; தேசிய ஆணையம் விசாரணை துவக்கம்
கோவை: தமிழக அரசு மற்றும் தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் செயல்பாடுகள் பற்றிய விசாரணையைதேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் துவக்கியுள்ளதாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் தலைவர் ரத்தினசபாபதி தெரிவித்தார்.கோவையில் ரத்தினசபாபதி நிருபர்களிடம் கூறியதாவது: பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50லிருந்து 30 சதவீதமாக குறைத்து அம்பாசங்கர் ஆணைய சிபாரிசு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் ஒருதலைபட்சமாக கொடுத்த புள்ளி விபரங்கள் தவறானவை என்பதை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கும் உயர்நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளோம்.கடந்த ஜன. 28ம் தேதி தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் தமிழக அரசு மற்றும் தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் செய்த பிற்படுத்தப்பட்டோர் உரிமையை பாதிக்கும் செயல்களை பட்டியலிட்டு புகார் அளித்திருந்தோம். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப் படாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் &'ரிட்&' மனு தாக்கல்செய்தோம்.மேலும் மற்ற சில நடவடிக்கைகளையும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டுசென்றோம். இதன் அடிப்படையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழக அரசு மற்றும் தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் பற்றிய விசாரணையை தற்போது துவங்கியுள்ளது.கடந்த 1989ம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு இரு &'ரிட்&' மனுக்களை தாக்கல் செய்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மூன்று சமுதாய உறுப்பினர்கள் மூன்று &'ரிட்&' மனுக்களை நேற்று முன்தினம் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அமர்வில் தாக்கல் செய்துள்ளனர். ஆறு &'ரிட்&' மனுக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.