உள்ளூர் செய்திகள்

பல்கலை. மாணவர் ஜாமினை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டில் மனு

புதுடில்லி; குடியுரிமை திருத்தச் சட்ட போராட்ட வழக்கில் கைதான இரு மாணவியர் மற்றும் ஒரு மாணவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டில்லி போலீஸ் மனு தாக்கல் செய்துள்ளது.கடந்த 2019ல் டில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவியர் நடாஷா நர்வால் தேவகனா கலிதா ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை மாணவர் ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நேற்று முன்தினம் டில்லி உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.மூவருக்கும் அரசியல் சாசன சட்டப்படி தங்கள் கருத்துக்களை சொல்ல உரிமை உள்ளதாகவும் ஆட்களை திரட்டி போராடுவது குற்றமல்ல எனவும் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருந்தது. போராடும் உரிமைக்கும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அரசு புரிந்து கொள்ள தவறி விட்டதாகவும் இந்த எண்ணம் தொடர்ந்தால் அது ஜனநாயகத்திற்கு சோகமான நாள் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.இந்நிலையில் டில்லி போலீசார் நடாஷா கலிதா ஆசிப் இக்பால் ஆகியோருக்கு டில்லி உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்