உலகின் உயர் பண்பாடு தமிழ்ப் பண்பாடு: நீதியரசர் மகாதேவன் பேச்சு
பாளையங்கோட்டை: அமைப்பியல், பின் அமைப்பியல், அழகியல் பார்வையோடு தமிழில் புதுத்திறனாய்வுத் தளங்களை இளைய தலைமுறை வாசகர்களுக்கு உணர்த்தும் நோக்கில் நிகழ்ச்சிகளை நடத்தி வரும் மேலும் இலக்கிய அமைப்பு தமிழில் தொடர்ந்துவரும் இலக்கிய விமர்சன மரபைக் காத்து அடுத்த தலைமுறைக்குத் தருவதற்காகப் பல ஆண்டுகளாக மேலும் இலக்கிய விமர்சன விருதினைத் தமிழ் விமர்சனத் துறையில் தடம் பதிக்கும் விமர்சகர்களுக்குத் தந்து ஊக்கப்படுத்தி வருகிறது.இந்த ஆண்டிற்கான மேலும் இலக்கிய விமர்சன விருது வழங்கும் நிகழ்ச்சி 9.07.2023 ஞாயிற்றுக்கிழமை பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. சுரண்டை அரசு கல்லூரித் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் ரமேஷ் விழிப்புணர்வுப் பாடல் பாடினார்.மேலும் அமைப்பின் தலைவர் ம.தி.தா. இந்துக் கல்லூரி மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் வே.கட்டளை கைலாசம் வரவேற்புரையாற்றினார். மேலும் அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் சிவசு அறிமுக உரையாற்றினார். கல்லூரித் தாளாளர் ஹாஜி த.இ.செ.பத்ஹுர் ரப்பானி கருத்தரங்கிற்கு தலைமை வகித்தார். முதல் அமர்வில் கன்னியாகுமரி இலக்குமிபுரம் கல்லூரி ஆங்கிலத்துறைத் தலைவர் டாக்டர் சேவியர் சந்திரபோஸ் தற்கால மூன்றாம் உலக இலக்கியப் போக்குகள் எனும் தலைப்பில் ஆய்வுரை வழங்கினார்.அமர்வு: 2தற்காலப் படைப்பிலக்கியச் சூழல் எனும் அமர்வில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் டாக்டர் சே.மு.அப்துல்காதர் முன்னிலை வகிக்கஅக்கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் டாக்டர் செளந்தர மகாதேவன் அவ்வமர்வை நெறிப்படுத்தி நடத்தினார். ஆந்திர மாநிலம் குப்பம் திராவிடப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவர் டாக்டர் விஷ்ணு குமரன் உள்ளிட்ட பேராசிரியர்கள் ஆய்வு மாணவர்கள் 30 பேர் உரை வழங்கினர்.மேலும் விமர்சன விருதுகள்சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் பங்கேற்று 2023 ஆம் ஆண்டிற்கான மேலும் இலக்கிய விமர்சன விருதுகளை கோவிந்த பேரி மனோ கல்லூரித் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.விக்டர் பாபு, மதுரை தியாகராசர் கல்லூரித் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா முனைவர் அ.மோகனா ஆகியோருக்கும் முனைவர் அந்தோணிராஜ், முனைவர் சுடலைமணி முனைவர் முத்தையன், முனைவர் இராமச்சந்திரன் மாணவி இன்சிகா ஆகிய இளம் படைப்பாளிகள், விமர்சகர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்புரையாற்றிய போது,உலகின் உயர் பண்பாடு தமிழ்ப் பண்பாடுஉலகளாவிய தமிழ் இலக்கிய விமர்சனத்தை 40 ஆண்டுகளுக்கு முன்னர் மேலும் இலக்கிய இதழ் மூலம் பாளையில் தொடங்கியவர் பேராசிரியர் சிவசு. பொதுவாக இலக்கியம் சார்ந்து ஆராயும் சூழலை எடுத்துக் கொண்டால் அது சவாலானதுதான். இலக்கியம் குறித்து ஓர் அறிஞன் ஆராய முயன்றான். இலக்கியம் எப்படி நிற்கிறது? தத்துவப் பின்புலத்திலா? அரசியலா படைபலத்திலா? என்று ஆராய்ந்ததில் ஓர் இலக்கியம் செழுமையான கலாச்சாரம், மொழி வளத்தால் மட்டுமே சிறந்து விளங்குகிறது அதுவே இன்டாலஜி (இந்தியவியல்) என்று பிரஞ்சு அறிஞன் ஆராய்ந்து சொன்னான். அதை விடச் செழுமை மிக்க தமிழ்ப் பண்பாட்டினைக் கருத்தில் கொண்டு அதைத் தமிழாலஜி என்று மாற்ற வேண்டும் என்றான். சங்கங்கள் சார்ந்த மொழி வளர்ப்பு நம் தமிழ் மண்ணில் முன்பே இருந்தது.மொழியின் வழியே படைப்பின் வழியே இயங்கும் படைப்பாளியைக் கவுரவப் படுத்தும் உயர்ந்த பணியை மேலும் அமைப்பு சிறப்பாகச் செய்வதால் அவ்வமைப்பைப் பாராட்டுகிறேன் உலகில் சிறந்த மண் தமிழ் மண். பண்பாடும் செழுமையான இலக்கியங்களும் பிறந்த மண் தமிழ் மண். மனிதன் தோன்றியதிலிருந்து ,சிந்தனை தோன்றியதிலிருந்து மனிதன் அதை இலக்கியமாகப் பதிவு செய்து வைத்துள்ளான். வரலாற்று ஆசிரியர் குறிப்புகளிலிருந்து பார்த்தால் உண்மை புரியும். கூத்த நூல் எனும் தமிழ் நூல் அரிய தகவல்களைச் சொன்னது. உடுக்கையில் பிறந்தது ஓசை, ஓசையில் பிறந்தது இசை, இசையில் பிறந்தது கூத்து, கூத்தில் பிறந்தது நாடகம் என்று பல்வேறு பரிமாணங்களில் பதிவு செய்தது.இந்த மண்ணின் வீரியமும் படைப்பும் வேறு எந்த மண்ணுக்கும் இல்லை. 2 - 6 ஆம் நூற்றாண்டில் களப்பிரர் காலம். 6 ஆம் நூற் ஞானசம்பந்தர் மூன்று திருமுறைகளைத் தருகிறார். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், காரைக்காலம்மையார், திருமூலர் என்று வரிசையாய் தமிழ் வளர்த்த சான்றோர்கள் வந்தார்கள்.பன்னிரு திருமுறை படைத்தார்கள். ஆழ்வார்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் படைத்தனர். தன்னிலிருந்து விலகி தமிழ் என்கிற உயர்ந்த மொழி பேசுவது அருளாளர் மரபாய் தமிழில் மலர்ந்தது. நம்மை நாம் அறிவது ஞானம். அதைக் காட்டுகிறவன் இறைவன். தமிழ்க் காப்பிய அழகியல் சித்திரத்தைத் தந்த கம்பன். அறம் சார்ந்த வாழ்வு தந்த 2000 ஆண்டுகளுக்கு முன் தந்த தொல்காப்பியம். மண்ணையும் மொழியையும் 10000 பாடல்களால் கம்பன் வடித்துத் தந்தான். இந்தச் செய்தி வெளியே கொண்டு செல்லப்பட்டால் உலகளாவிய அளவில் கம்பராமாயணம் இன்னும் பேசப்பட்டிருக்கும் என்று சாகித்ய அகாதமி வெளியிட்ட நூலின் முன்னுரை குறிப்பிடுகிறது.பிப்ரிஷியஸ் அகராதி, கால்டுவெல், ஜி.யூ.போப், எல்லீஸ், உவேசா திரு.வி.க. மறைமலையடிகள் என்று தேடித் தேடித் தமிழுக்குக் கொடைகள் தந்தனர். மறைந்து போன தமிழ் நூல்கள் எனும் நூலை மயிலை சீனி வேங்கட சாமி நாட்டார் எழுதினார். வீட்டில் ஓலைச் சுவடிகள் இருந்தால் நல்லதில்லை என்று எரித்த நிலையில் பெரும் மறுமலர்ச்சி வந்தது. பாண்டியன் அறிவுடை நம்பி படைப்பு பல படைத்து" எனும் பாடலில் இப்படி எழுதினான். "நீங்கள் ஆகச்சிறந்த மனிதர்களாக இருக்கலாம், செல்வர்களாக இருக்கலாம், குழந்தை இல்லாத வாழ்வு என்ன வாழ்வு என்று கேட்கிறார். நவீன இலக்கியம் இப்படித் தர முடியுமா? வேடனிடமிருந்து தப்பிச் சென்ற மானாய் துன்பங்களைத் தூர எறிந்து விட்டு மகிழ்வாய் வாழ முடியும். தத்துவம் சார்ந்து தான் படைத்த பிரதியைத் தன்னிலிருந்து பார்த்த வர்களாய் முன்னோர் எழுதியுள்ளார்கள். ஷேக்ஸ் பியர், போர்ஹே, மில்டன் என்று பல்வேறு பார்வையோடு எழுதினர். அமைப்பியல், பின் அமைப்பியல், நவீனத்துவம், பின்னை நவீனத்துவம் என வந்தது.சிவசு தமிழவனோடு இந்த முயற்சிகளை 40 ஆண்டுகளாகப் பயணிக்கிறார்.இலக்கிய உலகில் சிவசு என்றும் பேசப்படுவார். இலக்கியம் வாழ்வைத் தேடும் கண்ணாடி, பதவி சார்ந்த செல்வம் சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கலாம். அதுவா வாழ்வு? வாழ்வு எல்லாம் கடந்தது. நல்லது செய்யாவிட்டால் பரவா இல்லை, தீயவற்றைச் செய்யாதீர். உலகின் சிறந்த பத்து எழுத்தாளர்களில் முதலிடம் பெற்றவன் புதுமைப்பித்தன், சிவசு பித்தனில் முகிழ்த்த பத்து என்ற நூல் குறிப்பிடத்தக்கது. 18 வரிகளில் கஃபா எழுதிய கதையை தாகூர் வியந்தார். வண்ணநிலவன் கதைகள், பிரதி பற்றி அவர் எழுதிய அறிதலும் புரிதலும் சிறப்பான கையேடு." என்று பேசினார்கல்லூரி ஆட்சிக் குழு உறுப்பினர் எல்.கே.எம்.ஏ. முகமது நவாப் உசேன் முன்னிலை வகித்தார். பேரா. அந்தோணிராஜ், பேரா. சாதிக் அலி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர். சாராள் தக்கர் கல்லூரி துணை முதல்வர் பேரா. வளர்மதி நன்றி கூறினார்.