குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தேனி மாணவியரின் கட்டுரை தேர்வு
குழந்தைகள் மத்தியில், அறிவியல் கண்டுபிடிப்புகளின் தாக்கத்தை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக, அறிவியல் இயக்கங்கள் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளன. குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது.அதில், இந்தியா முழுவதும் இருந்து மாணவ, மாணவியரால் தயாரிக்கப்பட்ட 572 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில், சிறந்ததாக 25 ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில், தமிழகத்தில் இருந்து இரண்டு கட்டுரைகளும் அடங்கும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, சாயப்பட்டறை கழிவுகளால் ஏற்படும் அபாயம் பற்றிய கட்டுரையும், தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவியர் ஐந்து பேர் கொண்ட குழு சமர்ப்பித்த, புங்க மரத்து எண்ணெய் ஒரு மாற்று எரிபொருள் என்ற ஆய்வுக் கட்டுரையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.ஆய்வுக் கட்டுரை தயாரிக்க, காமயகவுண்டன்பட்டி பள்ளி மாணவியர் குழுத் தலைவி செரின் பர்கானா, வழிகாட்டியாக ஆசிரியை ஜெயகீதா ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.