அரசுப் பள்ளி வகுப்பறையில் மழை நீர் ஒழுகுவதால் மாணவர்கள் அவதி
சிவகங்கை: இளையான்குடி அருகே பெரும்பாலை அரசு துவக்கப்பள்ளியில் ஓடுகள் உடைந்து மழை நீர் பள்ளிக்குள் ஒழுகுவதால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நகரகுடி ஊராட்சிக்குட்பட்ட பெரும்பாலை அரசு துவக்கப் பள்ளியில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி கட்டடம் கட்டி நீண்ட காலம் ஆகிவிட்டதால் பள்ளியின் மேற்கூரையில் உள்ள ஓடுகள் உடைந்து தற்போது மழை நீர் பள்ளிக்குள் ஒழுகி வருவதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இன்று சிவகங்கை மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்ததால், பள்ளிக்கு வந்த மாணவர்கள் மழை நீர் ஒழுகுவதையடுத்து தங்களது சாப்பாட்டு தட்டை பள்ளி வளாகத்திற்குள் வைத்து மழை நீரை பிடித்தனர். மேலும் மாணவர்கள் உயிர்பலி அச்சத்தில் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.