உள்ளூர் செய்திகள்

இந்திய மாணவர்களுக்கு பிரான்ஸ் அதிபர் அளித்த குடியரசு தின பரிசு

புதுடில்லி: 2030ம் ஆண்டுக்குள் பிரான்சில் 30 ஆயிரம் இந்திய மாணவர்கள் இருப்பார்கள். அது தான் எனது இலக்கு என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இது, வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பெரிதும் உதவும்.குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இந்தியா வந்துள்ளார்.அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: 2030ம் ஆண்டிற்குள் பிரான்சில் 30 ஆயிரம் இந்திய மாணவர்கள் இருப்பார்கள். இதுவே எனது உயர்ந்த இலக்கு. ஆனால், அதனை நிகழ்த்துவதில் உறுதியாக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.மேலும், இந்திய மாணவர்களுக்கு பிரான்ஸ் எப்படி உதவும் என விளக்கிய மேக்ரான், பிரெஞ்சு மொழி தெரியாத மாணவர்களை அங்குள்ள பல்கலைகளில் படிக்க அனுமதிக்கும் வகையில், சர்வதேச வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்கள், பிரெஞ்ச் மொழியைக் கற்க புதிய மையங்களுடன் அலையன்ஸ் பிரான்சைஸ் நெட்வொர்க்கை உருவாக்கி வருகிறோம். சர்வதேச அளவில் வகுப்புகளை உருவாக்குகிறோம். இது பிரெஞ்சு மொழி கற்க விரும்பும் மாணவர்களை எங்கள் பல்கலைக்கழகங்களில் சேர அனுமதிக்கும். பிரான்சில், படித்த முன்னாள் இந்திய மாணவர்களுக்கும் விசா நடைமுறையை எளிமையாக்குவோம். இந்தியாவும், பிரான்சும் எதிர்காலத்தில் இணைந்து செய்ய வேண்டியது அதிகம். இவ்வாறு அந்த பதிவில் மேக்ரான் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்