அரசு மாணவர் விடுதியில் சமையலர் பணியிடம் காலி மாணவர்கள் சிரமம்
பெரியகுளம்: பெரியகுளம் அரசு பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதியில் சமையலர், வாட்ச்மேன் பணியிடங்கள் காலியாக உள்ளதால் விடுதியில் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.பெரியகுளம் அரசு பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதி, அரசு மேல்நிலைப்பள்ளி நியூகிரவுண்ட் மைதானம் அருகே 20 ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு கொடைக்கானல் மலை அடிவாரம் வெள்ளகெவி, பூண்டி,கிளாவரை, அடுக்கம், மன்னவனூர் பகுதிகளில் உள்ள விவசாய தொழிலாளர்கள் பிள்ளைகள் 32 பேர் விடுதியில் தங்கி படிக்கின்றனர்.விடுதியில் ஒரு வார்டன், இரு சமையலர், ஒரு தூய்மை பணியாளர், ஒரு வாட்ச்மேன் என 5 பேர் பணியில் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் உணவு சமைத்து வழங்க வேண்டும்.பணியிடம் காலிஇங்கு இரு சமையலர், வாட்ச்மேன் பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகளான வார்டன், தூய்மை பணியாளர் ஆகிய இருவர் அனைத்து பணிகளும் செய்யவேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர்களுக்கு உரிய நேரத்தில்உணவு சமைத்து பறிமாறுவதில் சிரமம் ஏற்படுகிறது.சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பழுது ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் தூய்மையின்றி செல்லும் வராகநதியை குடிநீராக பயன்படுத்தும் நிலை உள்ளது. மாவட்ட பிற்படுத்தப்பட்ட நலத்துறை நிர்வாகம் சமையலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.