ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்க அரசு கல்லுாரி கட்டடத்தில் மாற்றம்
விழுப்புரம்: விழுப்புரம் லோக்சபா (தனி) தேர்தலில் பதிவாகும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அரசு கல்லுாரியில் வைக்கப்பட இருப்பதையொட்டி, கட்டடத்தில் மாற்றம் செய்யும் பணிகள் துவங்கியது.விழுப்புரம் லோக்சபா (தனி) தொகுதியில் திண்டிவனம் (தனி), வானுார் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளில் பதிவாகும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைப்பதற்கும், ஓட்டுகளை எண்ணும் பணியும் விழுப்புரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடபெற உள்ளது.இதையொட்டி, அரசு கல்லுாரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பதற்கான இடங்களை தயார் செய்வதற்காக கட்டடத்தில் போதிய மாற்றங்களை ஏற்படுத்தும் பணிகள் நேற்று முன்தினம் துவங்கியது. இதற்காக கட்டடங்ளை இடித்து மாற்றம் செய்யும் பணி தேர்தல் பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.