உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் நிலவும் வெப்பத்தால் நோய் அபாயம்; கல்லுாரி விழாவில் தகவல்

ஊட்டி: ஊட்டியில் நிலவும் அதிக வெப்பத்தால் நோய் பரவும் அபாயம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., மருந்தாக்கியல் கல்லுாரி ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி என, முப்பெரும் விழா நடந்தது.அதில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மெடிக்கல் பல்கலைகழக துணைவேந்தர் நாராயணசாமி பங்கேற்று பேசியதாவது:இந்த ஆண்டு நீலகிரி மாவட்டமும் வெப்ப அலைக்கு தப்பவில்லை. வெப்பத்தால் இங்கு நோய்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இன்றைய சூழலில் மருத்துவ துறையில் மருந்தாளுனர்களின் பங்கு மிக முக்கியமாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு மருத்துவ துறையின் முன்னேற்றத்திலும் மருந்து தயாரிப்பு துறையிலும், மருத்துவ சேவை வழங்குவதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.''இந்த கல்லுாரியில் படித்த, படிக்கும் மாணவர்கள் அனைவரும் தற்போது ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு தங்கள் கல்வி பயில வேண்டும். வருங்கால ஆராய்ச்சி மாணவர்கள் சிறந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, சமூகத்தின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். அனைத்து துறை ஆராய்ச்சி மாணவர்களும் மாற்று மருத்துவ துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.கல்லுாரியின் ஆண்டு மலரான, பார்ம சாகா வின், 30 -வது தொகுப்பு வெளியிடப்பட்டது. விழாவில் சிறந்த மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.ஜெ.எஸ்.எஸ்., உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி குழுமத்தின் வேந்தர் தேசிகேந்திர மகா சுவாமிகள், இணைவேந்தர் சுரேஷ், ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் கீதாஞ்சலி, ஜெ.எஸ்.எஸ்., கல்லுாரி முதல்வர் தனபால் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்