உள்ளூர் செய்திகள்

மாணவர் நல திட்டங்கள்: பெற்றோருக்கு வாட்ஸ் ஆப் தகவல்

சென்னை: பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனருக்கு, பள்ளிக்கல்வித்துறை செயலர் குமர குருபரன் அனுப்பியுள்ள கடிதம்:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, 14 வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதுபற்றி பெற்றோருக்கு தெரிவிப்பதற்காக, அவர்களின் மொபைல் போன் எண்களை பெற வேண்டும்.இதுவரை, 35 லட்சம் மாணவர்களின் பெற்றோர் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டதும், இலவச பொருட்கள் வழங்கப்பட உள்ளன. தலைமை ஆசிரியர்கள் துணையுடன், மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு, நலத்திட்டங்கள் குறித்த விபரங்களை எடுத்துரைக்க வேண்டும். பெற்றோரின் மொபைல் போன் எண்ணுக்கு, ஓ.டி.பி., அனுப்பப்படும் விபரத்தை, பெற்றோருக்கு தெரியப்படுத்தி, இப்பணியை செய்து முடிக்க வேண்டும். 'வாட்ஸ் ஆப்' யில் விரைந்து தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்