உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல்; கர்நாடக கல்லுாரிகளின் செயல்பாடு எப்படி
பெங்களூரு: உயர் கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலில், கர்நாடகாவைச் சேர்ந்த பல்வேறு கல்வி நிறுவனங்கள், வெவ்வேறு பிரிவுகளில் இடம் பெற்றுள்ளன.மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், உயர் கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.அந்த வகையில், மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நடப்பாண்டு சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டார். இதில், கர்நாடகாவை சேர்ந்த பல்வேறு கல்வி நிறுவனங்கள், வெவ்வேறு பிரிவுகளில் இடம் பெற்றுள்ளன.ஐ.ஐ.எஸ்.சி.,இதில், சிறந்த பல்கலைகள் பிரிவில், ஐ.ஐ.எஸ்.சி., முதல் இடத்தை பிடித்து, 9வது ஆண்டாக தன் ஆதிக்கத்தை செலுத்தி உள்ளது. இந்த பிரிவில், உடுப்பியில் உள்ள மணிப்பால் உயர்கல்வி நிறுவனம் 4வது இடத்தையும்; மைசூரு ஜெ.எஸ்.எஸ்., உயர்கல்வி நிறுவனம் 24வது இடத்தையும் பிடித்துள்ளன.மைசூரு பல்கலை 54வது இடத்தையும்; கிரைஸ்ட் பல்கலை 60வது இடத்தையும்; பெங்களூரு ஜெயின் பல்கலை 65வது இடத்தையும்; மங்களூரு என்.ஐ.டி.டி.இ., 66வது இடத்தையும்; பெலகாவி விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலை 75வது இடத்தையும், பெங்களூரு பல்கலை 81வது இடத்தையும்; பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலை 90வது இடத்தையும்; மங்களூரு எனேபோயா பல்கலை 95வது இடத்தையும் பிடித்துள்ளது.ஒட்டு மொத்த செயல்பாடு பிரிவில், பெங்களூரின் ஐ.ஐ.எஸ்.சி., எனும் இந்திய அறிவியல் கழகம் இரண்டாம் இடத்தையும்; மைசூரு ஜெ.எஸ்.எஸ்., உயர்கல்வி நிறுவனம் 36வது இடத்தையும்; சூரத்கல் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் 46வது இடத்தையும், மைசூரு பல்கலை 86வது இடத்தையும்; பெங்களூரு கிரைஸ்ட் பல்கலை 90வது இடத்தையும் பிடித்துள்ளது. மருத்துவ கல்லுாரிகள் பிரிவில், பெங்களூரில் உள்ள நிமான்ஸ் எனும் தேசிய மனநல மையம், 4வது இடத்தையும்; மணிப்பாலில் உள்ள கஸ்துாரிபா மருத்துவ கல்லுாரி 9வது இடத்தையும் பிடித்துள்ளது.பொது பல்கலைமாநில பொது பல்கலைகளில் முதல் 10 இடங்களில், ஒரு பல்கலை கூட இடம்பெறவில்லை. இந்த பிரிவில், மைசூரு பல்கலை 19வது இடத்தையும்; பெலகாவி விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலை 22வது இடத்தையும்; பெங்களூரு பல்கலை 24வது இடத்தையும்; பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலை 44வது இடத்தையும் பிடித்துள்ளது.சிறந்த கல்லுாரிகள் பிரிவில், பெங்களூரு செயின்ட் ஜோசப் வணிக கல்லுாரி 55வது இடத்தையும்; மங்களூரு செயின்ட் அலாய்சியஸ் கல்லுாரி 58வது இடத்தையும்; பெங்களூரு கிரைஸ்டு ஜெயந்தி கல்லுாரி 60வது இடத்தையும்; பெங்களூரு எம்.எஸ்.ராமையா கலை, அறிவியல், வணிக கல்லுாரி 87வது இடத்தையும் பிடித்துள்ளது.ஆராய்ச்சி பிரிவில், ஐ.ஐ.எஸ்சி., முதல் இடத்தையும்; மணிப்பால் உயர் கல்வி நிறுவனம் 23வது இடத்தையும்; பெங்களூரு ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மையம் 34வது இடத்தையும்; சூரத்கல் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் 42வது இடத்தையும்; நிமான்ஸ் 43வது இடத்தையும் பிடித்துள்ளது.புதிய கண்டுபிடிப்புபுதிய கண்டுபிடிப்புகள் பிரிவில், ஐ.ஐ.எஸ்சி., 4வது இடத்தையும்; சிறந்த பொறியியல் கல்லுாரிகள் பிரிவில், சூரத்கல் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் 17வது இடத்தையும்; மணிப்பால் உயர் கல்வி நிறுவனம் 56வது இடத்தையும்; கிரைஸ்ட் பல்கலை 93வது இடத்தையும், ஜெயின் கல்லுாரி 95வது இடத்தையும்; பெங்களூரு ஆர்.வி.கல்லுாரி 99வது இடத்தையும்; துமகூரு சித்தகங்கா தொழில்நுட்ப நிறுவனம் 100வது இடத்தையும் பிடித்துள்ளது.சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களில், பெங்களூரின் ஐ.ஐ.எம்., இரண்டாவது இடத்தையும்; கிரைஸ்ட் பல்கலை 60வது இடத்தையும்; ஜெயின் பல்கலை 77வது இடத்தையும் பிடித்துள்ளது.சிறந்த சட்ட கல்வி நிறுவனங்களில், பெங்களூரின் தேசிய சட்டப்பள்ளி இந்திய பல்கலை முதல் இடத்தையும்; கிரைஸ்ட் பல்கலை 15வது இடத்தையும்; அல்லய்ன்ஸ் பல்கலை 18வது இடத்தையும் பிடித்துள்ளது.இப்படி பல்வேறு பிரிவுகளில் கர்நாடகாவின் சில முக்கிய கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.