உள்ளூர் செய்திகள்

பெரியார் பல்கலை உளவியல் துறை பேரதிர்ச்சி மேலாண்மை கருத்தரங்கு

ஓமலுார்: பல்கலை உளவியல் துறை சார்பில், பேரதிர்ச்சி மேலாண்மை குறித்த தேசிய கருத்தரங்கு நடந்தது.சேலம் பெரியார் பல்கலையில் உளவியல் துறை சார்பில், பேரதிர்ச்சி மேலாண்மை குறித்த தேசிய கருத்தரங்கு நேற்று துறைத்தலைவர் கதிரவன் தலைமையில் நடந்தது. கருத்தரங்கை பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் துவக்கி வைத்து பேசியதாவது: வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் மனிதன், சூழல் மாற்றங்களின் அழுத்தங்களால் பல்வேறு அதிர்வுகளை சந்திக்கிறான். ஒவ்வொரு அதிர்வும் உள மற்றும் உடல் சார் பாதிப்புகளை ஏற்படுத்தி செல்கிறது.உளநல நுட்பங்களை கற்றவர் அதை வெல்கிறார், முன்னேறுகிறார். அவற்றை கல்லாதவர் அதில் மூழ்குகிறார். ஆகவே வாழ்வில் வெற்றி என்பது சூழல் மாற்ற நுட்பங்களை கற்பதும், உயர்த்த உணர்தலுமே ஆகும். ஆகவே மாணவ பருவத்தில் இருந்தே அதை கற்க வேண்டும். இவ்வாறு பேசினார்.கருத்தரங்கில் பங்கேற்ற, பாலஸ்தீன அரேபிய அமெரிக்க பல்கலையின், ஆரோக்கிய மருத்துவ உளவியல் நிபுணர் பேராசிரியர் வஹீல் முஸ்தபா அபுஹாசன், பேரதிர்ச்சி நிகழ்வுகளை மேலாண்மை செய்யாமல் இருந்தால், அது மன சிதைவு நோயாக மாறும் வாய்ப்பு அதிகம். ஆகவே அதிர்வின் ஆரம்ப கட்டத்திலேயே, உள் உடல் சிகிச்சை முறையில் தளர்வு படுத்தி சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு யுக்திகளை தெரிவித்தார்.பேராசிரியர் வெங்கடாசலம், உதவி பேராசிரியர்கள் நித்தியானந்தன், ஜெயக்குமார், உளவியல் மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்