உள்ளூர் செய்திகள்

புற்றுநோய் பயாப்ஸி ஊசியில் சென்சார்; கோவை அரசு கல்லுாரிக்கு காப்புரிமை

கோவை: புற்றுநோய் கண்டறிவதற்கான பயாப்ஸி ஊசியால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரி, புதிய வடிவமைப்பை உருவாக்கியுள்ளது.கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில், அறிவுசார் சொத்துரிமை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில், மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, புற்றுநோயை கண்டறிவதற்கான பயாப்ஸி ஊசி வடிவமைப்பில், சென்சார் பயன்படுத்தி, பயாப்ஸி கன் எனும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இதற்கு, காப்புரிமையும் பெற்றுள்ளனர்.கல்லுாரியின் அறிவுசார் சொத்துரிமை மைய ஒருங்கிணைப்பாளர் சேகர் கூறியதாவது:உடலில் புற்றுநோய் இருப்பதை உறுதி செய்ய, கட்டியில் இருந்து திசுக்கள் சேகரிக்கப்பட்டு, அவை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். திசு சேகரிப்புக்கு நீண்ட ஊசி பயன்படுத்தப்படும். இந்த ஊசியை, தொடை போன்ற பகுதிகளில் செலுத்தும் போது, அது எலும்புகளை சேதப்படுத்தும். இதனால் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.இதற்கு தீர்வு காண திட்டமிட்டோம். சென்சார்கள் பொருத்தி, கட்டி இருக்கும் இடத்தை துல்லியமாக கணக்கிட்டு ஊசியை செலுத்தி, திசு சேகரிப்பதற்கான புதிய நுட்பத்தை உருவாக்கியுள்ளோம். இதற்கு பயாப்ஸி கன் எனப் பெயரிட்டுள்ளோம். காப்புரிமை சட்டப்படி, இதற்கான வடிவமைப்பை பதிவு செய்தோம். காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்