உலகின் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும்: அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை
புதுடில்லி: உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை உருவெடுக்க செய்தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நடைபெற்றஉலகப்பொருளாதாரமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ், உற்பத்தி துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தபட்டு வருவதாக தெரிவித்தார். சூரிச் நகரில் அந்நாட்டு ரயில்வேயின் (SBB) விளக்கக்காட்சியுடன் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் வரை காட்சிப்படுத்தப்பட்டன. இந்திய ரயில்வே துறையின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தக்கூடிய அதிநவீன தொழில்நுட்பங்கள் குறித்து அந்நாட்டு நிபுணர்களுடன் அவர் கலந்துரையாடினார். இதைத் தொடர்ந்து ரோம்பெர்க் செர்சா ஏஜி, செலக்ட்ரான், யுசென்ட்ரிக்ஸ், ஆடெக் மற்றும் நு கிளாஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.