உள்ளூர் செய்திகள்

மும்மொழி திட்டத்தை அமல்படுத்துங்க தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

திண்டுக்கல் : தேசிய கல்விக்கொள்கை எந்த மொழியையும் திணிக்கும் வண்ணம் இல்லை. இங்கு மும்மொழி திட்டம் தேவை. அதை அமல்படுத்த வேண்டும் என, தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக திண்டுக்கல்லில் சங்க மாநில துணைத்தலைவர் விஜய் கூறியதாவது : தேசிய கல்விக் கொள்கை 2020 ன் படி ஒரு மாணவர் தன்னுடைய தாய்மொழி மட்டும் அல்லாமல் ஆங்கிலம், இந்தியாவின் ஏதாவது ஒரு மொழியை தேர்ந்தெடுத்து படிக்க வாய்ப்பு உண்டு. எந்த மொழியையும் திணிக்கும் வண்ணம் தேசிய கல்விக்கொள்கை இல்லை. அப்படி இருக்கையில் தமிழகத்தில் ஹிந்தி மொழி திணிப்பு என்று பலர் கண்டனம் தெரிவிக்கிறார்கள். கேரளா, கர்நாடகா, ஆந்திரா மும்மொழி கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டு கல்வியில் மேன்மை பெற்று வருகின்றன.வட மாநிலங்களில் உள்ள தமிழர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் தமிழ் கற்பிக்க மும்மொழிக்கொள்கை வகை செய்கிறது. தமிழகத்திலேயே வசதியான மாணவர்கள் தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளியில் சேர்ந்து மும்மொழி பயில்கின்றனர். அவ்வாறு இருக்க ஏழை, நடுத்தர மாணவர்கள் படிக்கக்கூடிய அரசு பள்ளிகளில் 3வதாக ஒரு மொழியை கற்பதற்கு தமிழக அரசு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பது தான் சிறந்தது.எதிர்கால மாநில வளர்ச்சி, மாணவர் திறன் மேம்பாடு, சமுதாய நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மும்மொழி கல்வித் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்