தமிழ் எங்கள் உயிர்; அதை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது
கோவை : தமிழ் எங்கள் உயிர்; தமிழை அழிக்க எந்த கொம்பன் வந்தாலும் முடியாது. அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கோவையில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.செய்தியாளர்களிடம், பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் காமராஜர் காலத்தில், 30,000 பள்ளிகள் துவங்கப்பட்டன. அத்தனை மாணவர்களுக்கும், இலவச கல்வி வழங்கப்பட்டது. தற்போது அரசியல்வாதிகள் பலரே, பள்ளிகளை நடத்துகின்றனர். அந்தப் பள்ளிகளில் ஹிந்தி மொழி கற்று கொடுக்கிறார்களா இல்லையா என்ற விபரங்களை, வெளியிட வேண்டும்.தமிழ் நம்முடைய உயிர். தமிழை ஒழிக்க எந்த கொம்பனாலும் முடியாது. அதை ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம். அதே நேரத்தில் தமிழை வைத்து பிழைப்பு நடத்த வேண்டும் என்று யார் வந்தாலும் அதையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி தந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று, முதல்வர் கூறுகிறார். அவரின் பேச்சை, ஆணவ பேச்சாக நான் பார்க்கிறேன். முறையற்ற பேச்சாக இருக்கிறது என்றார்.