மாணவியரை அடைத்து பாலியல் சித்ரவதை: தலைமறைவு தம்பதி கைது
சென்னை: பள்ளி மாணவியர் இருவரை வீட்டில் அடைத்து வைத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில், ஏழு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.கடந்த 2014ல், பாலியல் தொழில் கும்பல், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த, ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு படித்த மாணவியர் இரண்டு பேரை, வீட்டில் அடைத்து சித்ரவதை செய்தது.வழக்குப் பதிவுஅவர்களை, திட்டக்குடி, விருத்தாசலம், வடலுார், நெய்வேலி, விழுப்புரம் மற்றும் கோலியனுார், சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று, வீடு மற்றும் தனியார் தங்கும் விடுதிகளில் அடைத்து, பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தி வந்தது.இச்சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சி.பி.சி.ஐ.டி., போலீசார், 2016ம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். போலீசார் கூறியதாவது:கடலுார் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த பாலியல் தொழிலாளியான தனலட்சுமி, பள்ளி ஒன்றின் முன் இட்லி கடை நடத்தி வந்தார். தன் கடைக்கு வந்த ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவியரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.அப்போது, வாலிபர் ஒருவருடன் தனலட்சுமி உல்லாசமாக இருந்ததை மாணவியர் பார்த்துள்ளனர். இதை வெளியில் சொல்லக்கூடாது. நீங்களும் இதுபோல நடந்து கொண்டால், லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று, ஆசை காட்டி உள்ளார்.மாணவியரை, அந்த வாலிபருக்கு விருந்தாக்கி உள்ளார். தனலட்சுமி ஆட்டி வைக்கும் பாவைகளாக செயல்பட்ட மாணவியரை, விருத்தாசலத்தைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி கலா என்பவரிடம் விற்றுள்ளார்.அவர், இருவரையும், விழுப்புரம் மாவட்டம் கோலியனுாரைச் சேர்ந்த பாதிரியார் அருள்தாஸ் என்பவரின் வீட்டிற்கு அனுப்பி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார்.இப்படி, மாணவியர் இருவரும் பலருக்கு தாரை வார்க்கப்பட்டு, கடைசியில், நெய்வேலி அருகே வடலுாரில், பாலியல் புரோக்கராக செயல்பட்டு வந்த, அரியலுார் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், 35; அவரது மனைவி கவிதா, 40, ஆகியோரிடம் சிக்கிக் கொண்டனர்.இவர்கள் மாணவியரை சித்ரவதை செய்து, வி.ஐ.பி.,க்களுக்கு விருந்தாக்கி உள்ளனர்.அவர்கள் பிடியில் இருந்து மாணவியர் தப்பித்து, சொந்த ஊர் திரும்பியதும், இந்த தகவல்கள் தெரியவந்தன. இந்த வழக்கில், பாதிரியார் அருள்தாஸ் உட்பட, 22 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.ஒருவர் தலைமறைவாகி விட்டார். 21 பேர் கைதாகினர். அவர்களில் ஜாமினில் வெளிவந்த பின், இரண்டு பேர் இறந்து விட்டனர். மீதமுள்ள 19 பேரில், சதீஷ்குமார், கவிதா, ஜெபினா ஆகியோர், 2018ல் தலைமறைவாகி விட்டனர்.சிறை தண்டனைமற்ற எட்டு ஆண்கள், எட்டு பெண்கள் என, 16 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களில், பாதிரியார் அருள்தாசுக்கு, 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இந்நிலையில், தலைமறைவாக இருந்தவர்களில் ஜெபினா, கடந்தாண்டு சென்னையில் கைது செய்யப்பட்டார்.ஏழு ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து, கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் தனியார் நிறுவன ஊழியர் போல பதுங்கி இருந்த சதீஷ்குமாரும், திருவண்ணாமலையில் வீட்டு வேலை செய்து வந்த அவரது மனைவி கவிதாவும், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.இவ்வாறு போலீசார் கூறினர்.