அவசரகால முதலுதவி சிகிச்சை கையேட்டை பாடத்திட்டத்தில் சேர்க்க முயற்சி: தமிழிசை
தொண்டாமுத்துார்: கோவை அறம் அறக்கட்டளை சார்பில், அவசர கால முதலுதவி சிகிச்சை கையேடு வழங்கும் விழா, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லுாரியில் நடந்தது.கோவை அறம் அறக்கட்டளை நிறுவனர் ரகுராம் தொகுத்த, அவசரகால முதலுதவி கையேட்டை, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள், முன்னாள் கவர்னர் தமிழிசை ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கினர்.முன்னாள் கவர்னர் தமிழிசை பேசியதாவது:நோயாளிக்கு, சரியான நேரத்தில் சரியான சிகிச்சை கொடுத்தால் உயிர் பிழைப்பார். தெலுங்கானா கவர்னராக இருந்தபோது , டில்லியில் இருந்து, ஹைதராபாத்துக்கு விமானத்தில் வந்தேன். ஒரு பயணிக்கு உடல்நிலை சரியில்லை. உடனடியாக, சி.பி.ஆர். செய்ததும் இருதய துடிப்பு சீரானது. உடல்நிலை பாதிக்கப்பட்டவர், அப்போதைய ஆந்திரா மாநில டி.ஜி.பி. என்பது, அதன் பிறகே தெரிந்தது.இந்த முதலுதவி சிகிச்சை கையேடு, உயிர்காக்கும் புத்தகம். உழைப்புக்கு குறுக்கு வழியே கிடையாது. மாணவர்கள், ஏதாவதொரு கலையை கற்றுக்கொண்டு, சிறப்பு பெற வேண்டும். முதலுதவி சிகிச்சை கையேட்டை, தேசி ய பாடத்திட்டத்தில் சேர்க்க பிரதமர் மோடியுடன் பேசுவேன். தமிழகத்தில், 2026ல், நாங்களே இதை சேர்த்து விடுவோம்.இவ்வாறு, அவர் பேசினார்.