உள்ளூர் செய்திகள்

பெங்களூரில் உலகளாவிய திருக்குறள் மாநாடு புனித வளனார் பல்கலையில் ஆலோசனை

பெங்களூரு: உலகளாவிய திருக் குறள் மாநாடு தொடர்பாக, பெங்களூரு புனித வளனார் பல்கலைக்கழகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் சார்பில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், உலகளாவிய திருவள்ளுவர் மாநாடு பெங்களூரில் நடக்கவுள்ளது. மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக, பெங்களூரு புனித வளனார் பல்கலைக் கழகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.பல்கலைக்கழக துணைவேந்தர் அருட்தந்தை விக்டர் லோபோ தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பல்கலைக்கழக டீன் கிறிஸ்டோ செல்வன், திருவள்ளுவர் சங்க தலைவர் எஸ்.டி.குமார், பல்கலைக்கழக தமிழ் துறை பேராசிரியை சரளா ஆறுமுகம், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக திருவள்ளுவர் இருக்கை தலைவர் சேயோன், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் முத்துவேல், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியை திலகவதி, மயிலை திருவள்ளுவர் சங்கத்தின் சுதாகரன், கன்னியாகுமரி திருவள்ளுவர் அறக்கட்டளை பொறுப்பாளர் நற்றவன், பெங்களூரு திருவள்ளுவர் சங்க செயலர் பிரபாகரன், தாய்மொழி கூட்டமைப்பின் அருண், முனுசாமி கலந்து கொண்டனர்.மாநாட்டை துவக்கி வைக்க முக்கிய தலைவர்களை அழைப்பது; குழுக்கள் அமைப்பது; மாநாட்டு பணிகளை துரிதப்படுத்துவது உட்பட பல விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.உலகளாவிய திருக்குறள் மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், 'தாய்மொழி கூட்டமைப்பு' தலைவர் எஸ்.டி.குமார் கவுரவிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்