உள்ளூர் செய்திகள்

சம வேலைக்கு சம ஊதியம் கோரி பல் டாக்டர்கள் உண்ணாவிரதம்

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் பல் மருத்துவர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில், சென்னை சிவானந்தா சாலையில், நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. மாநில தலைவர் இளமதிவேந்தன் தலைமை வகித்தார்.சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும், 535க்கும் அதிகமான பல் மருத்துவர்களுக்கு, எம்.ஆர்.பி., வழியே சிறப்பு தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்தது.தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலர் முத்தரசன் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்