சத்யபாமா பல்கலை கிரிக்கெட் ஷிவ் நாடார் அணி அபார வெற்றி
சென்னை: பல்கலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், மாநிலம் முழுதும் 20 பல்கலை அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன.சத்யபாமா பல்கலை சார்பில், பல்கலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள், ஸ்ரீபெரும்புதுாரில் நடக்கின்றன.போட்டியில், மாநில முழுதும் இருந்து, 20 அணிகள் மோதுகின்றன. நேற்று நடந்த 'நாக் அவுட்' சுற்றுப் போட்டியில், கிரசண்ட் பல்கலை, வேல்ஸ் பல்கலை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற கிரசண்ட் பல்கலை முதலில் பேட்டிங் தேர்வு செய்து 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் எடுத்தது.அடுத்து களமிறங்கிய வேல்ஸ் பல்கலை அணி, துவக்கம் முதலே அதிரடி ஆட்டம் காட்டி, 11.3 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து, வெற்றி இலக்கை எளிதாக கடந்தது. மற்றொரு போட்டியில், முதலில் விளையாடிய சத்யபாமா பல்கலை அணி, ஷிவ் நாடார் பல்கலை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 14.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 67 ரன்கள் மட்டுமே எடுத்தது.ஷிவ் நாடார் பல்கலை அணி வெறும் 5.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.