உள்ளூர் செய்திகள்

சங்கரா கல்லுாரி மாணவ, மாணவியருக்கு கல்வெட்டு படித்தல், படியெடுத்தல் பயிற்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, கல்வெட்டு படித்தல் மற்றும் படியெடுத்தல் பயிற்சி, காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துாரில் அமைந்துள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இளங்கலை தமிழ் படிக்கும் மாணவ, மாணவியருக்கு கல்வெட்டு குறித்த பாடங்கள் இடம் பெறுகின்றன.அப்பாடங்களை மாணவ, மாணவியருக்கு செயல்வழியாக நடத்த வேண்டும் என, கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் செயல்படுத்தி வருகிறார்.அதன்படி சங்கரா கல்லுாரி தமிழ் துறை உதவி பேராசிரியர்கள் கணபதி, ஜெயலட்சுமி ஆகியோர், கல்லுாரியில் புதிதாக சேர்ந்துள்ள தமிழ் துறை மாணவ, மாணவியரை ஒருங்கிணைப்பு செய்தனர்.இம்மாணவ, மாணவியருக்கு காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் கல்வெட்டு படித்தல் மற்றும் படியெடுத்தல் பயிற்சி முகாம் நேற்று நடந்தது.இதில், கோவிலில் உள்ள பல்வேறு கல்வெட்டுகளை எளிமையாக படிக்கவும், கல்வெட்டுகளை எவ்வாறு படியெடுக்க வேண்டும் என, செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர்.இதில், காஞ்சி அருங்காட்சியக ஊழியர்கள், சங்கரா கல்லுாரியைச் சேர்ந்த 40 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்