உள்ளூர் செய்திகள்

அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள ஐ.டி.ஐ., எனப்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், நேரடி சேர்க்கைக்கு மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள் என, தெரிவிக்கப்பட்டுள்ளது காஞ்சிபுரம் புத்தேரி, கைலாசநாதர் கோவில் தெருவில், உள்ள ஐ.டி.ஐ., எனப்படும் தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, பல்வேறு தொழிற்பிரிவுகள் இலவசமாக பயிற்றுவிக்கப்படுகின்றன.மேலும், இலவச சைக்கிள், காலணி, பாடப்புத்தகம், வரைபட உபகரணங்கள், சீருடை, சீருடைக்கான தையல் கூலி மற்றும் மாதாந்திர உதவித்தொகையாக 750 ரூபாயும், அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவ மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இங்கு நடப்பாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு நாளை கடைசி நாள் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விபரங்களுக்கு 044 2722 5350; 96594 52204, 94444 96306 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஆர்.பாண்டியன், பயிற்சி அலுவலர் எஸ்.செழியன் ஆகியோர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்