உள்ளூர் செய்திகள்

பட்டம் பெறும் மாணவ, மாணவியர் தொடர்ந்து உயர்கல்வி பெற வேண்டும்

ஓமலுார்: சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.முதல்வர் கீதா தலைமை வகித்தார். கல்லுாரி முன்னாள் மாணவியான, கோவை, ஸ்ரீஈஸ்வர் பொறியியல் கல்லுாரி முதல்வர் சுதா, 623 மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.முன்னதாக சுதா பேசுகையில், “பட்டம் பெறும் மாணவ, மாணவியர், மேற்கொண்டும் உயர்கல்வி பெற வேண்டும். துறையில் அடிப்படை கல்வி அறிவை முழுமையாக பெற்றிருக்க வேண்டும். அதன் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். உங்கள் வளர்ச்சி என்பது சமூக வளர்ச்சியுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும்,” என்றார்.துணை முதல்வர் ஷோபா, தேர்வு கட்டுப்பாடு அலுவலர் சிவலட்சுமி, பல்வேறு துறை பேராசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்